கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெலரூஸில் தங்கியிருந்த 277 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பெலரூஸில் தங்கியிருந்த 277 இலங்கையர்கள் நேற்றிரவு 11.45 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.இவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் 120 பயணிகள் இன்று காலை லண்டனின் ஹீத்துரே விமான நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.