இலங்கையில் நேற்றைய தினம் (28.05.2020) மாத்திரம் 61 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,530 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 61 பேரில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 35 பேரும், இலங்கை கடற்படையினர் 26 பேருமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 



இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,530ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 775 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 68 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.