2, 500 பசுக்களை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்

Published By: J.G.Stephan

28 May, 2020 | 09:52 PM
image

(ஆர்.யசி)

அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 பசுக்களை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த நாட்டின் நுகர்வுக்கு  இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவை குறைக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பத்திரன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

எனினும் அவுஸ்திரேலியாவில்  இருந்து 2500 பசுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

கமத்தொழில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவை பத்திரம் மூலமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த நாட்டிற்கு பொதுமக்கள் நுகர்வுக்காக 50 பில்லியன் ரூபாய்கள் பால்மா இறக்குமதியால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுகின்றது.

ஆனால் அதனை இலங்கையில் உற்பத்தி செய்து தேசிய பால் உற்பத்தியை பலப்படுதவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08