(செ.தேன்மொழி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கியத்தின் சின்னமென கருதுவதாக இந்திய ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது இந்தியாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள பௌத்தர்களும், இந்து தமிழர்களும் ஒரே சமூகத்தினர் என்று குறிப்பிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இந்தியாவில் போன்று இலங்கையிலும் இந்து தமிழர்களும், சிங்கள பௌத்தர்களும் ஒரு சமூகத்தவர்கள், முஸ்லிமும், கிறிஸ்த்தவமும் இல்லாத ஒருவரே இந்து வென்று இந்திய அரசியலமைப்பின் 20 சரத்து வரையரைச் செய்கின்றது. இலங்கையில் அமைதிகாணுவதற்கான வழியும் அதுவே ஆகும்.

 அதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்த ஐக்கியத்திற்கு வழிகாட்டும் ஒருசின்னமாகவே நான் கருதுகின்றேன் என்றும் பதிவிட்டுள்ளார்.