(செ.தேன்மொழி)

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் 466 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் தொகை இன்று வியாழக்கிழமை மாலை வரை 1,503 பேராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 466 பேர் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்களாவர். இதில் 366 பேர் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாவர்.இந்நிலையில் நேற்று புதன்கிழமை மாத்திரம் 150 தொற்றாளர்கள் கண்டறிப்பட்டதுடன், இவர்களுள் 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 97 பேர் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.