அரிசி சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய திகதியிடப்பட்டு வெளியானது.

அரிசிகளின் உயர்ந்தபட்ச சில்லறை விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் விலை 96 ரூபாய் எனவும்,  ஒரு கிலோகிராம்  சம்பா அரிசியின்  விலை 98 ரூபா எனவும் சிவப்பரிசி கிலோ ஒன்றின் விலை 93 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.