தரமற்ற கட்டட நிர்மாணிப்பு ; கிளிநொச்சியில் வீட்டுத்திட்ட பயனாளிகள் அதிருப்தி

28 May, 2020 | 08:12 PM
image

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த கட்டுமானப் பணியில் தமக்கு திருப்தி இல்லை எனவும் வீட்டுத்திட்ட பயனாளிகள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 668 வீடுகள் கட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு முதல் நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களில் 167 வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்ற வருகின்றது.

அவற்றிலேயே குறித்த குறைபாடுகள் காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரம் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களிற்காக பயன்படுத்தப்படும் செங்கற்கள் தரமற்றவையாக காணப்படுவதாகவும், அவை அண்மையில் பெய்த மழைக்கு கரைந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த கற்களைக்கொண்டு அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பற்றதாக அமைந்துவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இவ்வாறான நிலையில், குறித்த கட்டுமானப் பணிகளின் தரத்தினை ஆராய்ந்து, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கண்டாவளை பிரதேச செயலாளரிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்களினால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக் குறித்த வீடுகளை இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பார்வையிட்டார். 

குறித்த கட்டடத்தின் தரம் தொடர்பில் நேரடியாக பார்வையிட்ட பிரதேச செயலாளர், குறித்த பணிகளை முன்னெடுக்கும் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மக்களிற்கு பொருத்தமான தீர்வொன்றினை பெற்று தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03