நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதே அரசாங்கத்தின் கொள்கை - கம்மன்பில

Published By: Digital Desk 4

28 May, 2020 | 05:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி  கிரியைகள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்.

சுகாதார பாதுகாப்பு நிமித்தம் தற்போது பின்பற்றப்படும்  நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றுவது அவசியமாகும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுவதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள். அரசியல் நோக்கத்தை கருத்திற் கொண்டே  ஐக்கிய தேசிய கட்சியினர்  அரசாங்கத்துக்கு எதிராக விமர்சிக்கினரறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது உரிய நடவடிக்கையினை சுகாதார தரப்பினர் முன்னெடுப்பது அவசியமாகும்.

குவைத் நாட்டில் இருந்து வந்த இலங்கையர்கள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இதன் பிறகே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அழைத்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள  இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இது அரசாங்கத்தின் கொள்கையாகவும் காணப்படுகின்றது.

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியைகள் சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும். மக்கள் ஒன்று கூடுவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கபட மாட்டாது.

கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு  அவசியமாகும்.  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09