நீடித்து உழைக்கின்ற நுகர்வோர் சாதனங்களை விற்பனை செய்வதில் நாட்டில் முன்னணி வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இடம்பெற்ற Dell தெற்காசியா மற்றும் கொரியா விநியோக உச்சி மாநாடு 2016 நிகழ்வில் தெற்காசிய அபிவிருத்தியடைந்து வருகின்ற சந்தைப்படுத்தல் குழுவில் உச்ச நுகர்வோர் விநியோகப்பங்காளருக்கான மதிப்புமிக்க விருதை வென்றுள்ளது.

தெற்காசிய அபிவிருத்தியடைந்து வருகின்ற சந்தைப்படுத்தல் குழு நாடுகளிலுள்ள உச்ச நுகர்வோர் சில்லறை வர்த்தக பங்காளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதுடன், வருமானம், அர்ப்பணிப்புடனான ஈடுபாடு மற்றும் பிராந்தியத்திற்கான ஒட்டுமொத்த பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவை தெரிவு செய்யப்படுகின்றன.

DELL தெற்காசியா மற்றும் கொரியா விநியோக உச்சி மாநாடு 2016 நிகழ்வில் இந்த விருதைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு இலங்கை நிறுவனமாக சிங்கர் திகழ்கின்றது.

சிங்கர் மற்றும் DELL நிறுவனங்களுக்கிடையிலான பங்குடமை 2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதுடன், தொழிற்பாடுகளின் முதற் கட்டத்தில் DELL விற்பனையில் விரைவான வளர்ச்சியை சிங்கர் வெளிக்காண்பித்துள்ளதுடன், அதன் விளைவாக இலங்கையில் DELL இன் ஒட்டுமொத்த சந்தைப்பங்கும் அதிகரித்துள்ளது.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத் துறைப் பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன கூறுகையில்,

“இவ்விருதானது DELL வர்த்தகநாமத்தின் வலிமையை மீளவும் நிரூபித்துள்ளதுடன் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உறுதியான விநியோக வலையமைப்பு மற்றும் நாட்டிலுள்ள மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு மற்றும் சிங்கரின் மூலமாக இலங்கை மக்களுக்கு அனுபவங்களை வழங்கும் ஊக்குவிப்புக்கள் அடங்கலாக தனித்துவமான வழங்கல்களே இதற்கு வழிகோலியுள்ளன.

இந்த உச்ச பிராந்திய சாதனையையிட்டு நாம் பெருமிதம் கொள்வதுடன், இலங்கையில் மிகச் சிறந்த DELL வழங்கல்களை நாம் தொடர்ந்தும் அறிமுகம் செய்வோம்.”

தெற்காசியா மற்றும் கொரியா விநியோக உச்சி மாநாடு 2016 நிகழ்வானது அனைத்து Dell விநியோக உறுப்பினர்களும் இடைத்தொடர்புபடுகின்ற பிராந்திய நிகழ்வுகளுள் ஒன்றாக அமைந்துள்ளதுடன், நுகர்வோர் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய இரு பிரிவுகளிலும் இலங்கை மற்றும் விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கௌரவத்தை சிங்கர் பெற்றுள்ளது.

வருடத்தில் னுநடட இன் பெறுபேறுகளை இனங்கண்டு அங்கீகரிப்பதற்கான ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது மட்டுமன்றி, பிராந்தியத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப பெரு நிறுவனத்தின் மூலோபாயரீதியான நகர்வுகள் மற்றும் எதிர்காலத்திட்டங்களும் இங்கே கலந்துரையாடப்படுகின்றன. Dell நிறுவனத்தின் அதிகாரிகள், தலைமை நிலை அதிகாரிகள், தெற்காசியா மற்றும் கொரிய பிராந்தியத்தில் Dell இன் விநியோக பங்காளர்கள் மத்தியிலுள்ள பிரதான வர்த்தக தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் என அனைவரையும் இந்த உச்சி மாநாடு ஒன்று சேர்ப்பதுடன், ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள Dell இன் உள்நாட்டு அணியானது தனது விநியோக பங்காளர்கள் மத்தியிலிருந்து பிரத்தியேகமாக இதற்கான பரிந்துரைகளை மேற்கொள்கின்றது.

இந்நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் 100 இற்கும் மேற்பட்ட விநியோக பங்காளர்கள் கலந்து கொண்டனர். 

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான Dell இன் உள்நாட்டு முகாமையாளரான ரொஷான் நுகவெல கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த மகத்தான சாதனைக்காக நான் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கர் மற்றும் Dell நிறுவனங்கள் கட்டியெழுப்பியுள்ள பங்குடமையானது சிங்கரின் நம்பிக்கைமிக்க மேன்மையின் பக்கபலத்துடன் நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதிசிறந்த உற்பத்திகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது.

சிங்கர் போன்ற அர்ப்பணிப்புடனான பங்காளர்களின் பக்கபலமே இலங்கையில் மிகக் குறுகிய காலப்பகுதியில் Dell பன்மடங்கு வளர்ச்சி பெற உதவியுள்ளதுடன், IDC வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுச் சந்தையில் முன்னிலை வகிக்கும் PC  கணினி வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது.

விசுவாசம் மிக்க எமது வாடிக்கையாளர்களுக்கான எமது சேவைகளை இன்னும் பலப்படுத்துவதற்கு சிங்கருடன் இணைந்து இன்னும் பல சாதனைகளைப் படைப்பதற்கு நாம் ஆவலுடன் உள்ளோம்”.

நாடெங்கிலும் வியாபித்துள்ள 420 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான விற்பனைக்கு பின்னரான சேவை வலையமைப்பினூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை சிங்கர் வழங்கிவருகின்றது. நிறுவனத்தின் முயற்சிகளுக்காக அது ஏராளமான விருதுகளை வென்றுள்ளதுடன், இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நாட்டில் மக்களின் அபிமானத்தை வென்றுள்ள வர்த்தகநாமமாக முதலிடத்தில் திகழ்ந்து வருகின்றது.