(இரா.செல்வராஜா)

ஆசங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

அத்துடன் தனியார் பஸ்களில் பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கப்படுவதும் கட்டாயமாக்கப்படுமென போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போக்குவரத்து சபை பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றச் செல்வதாக நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்படுகின்றன.

பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசனங்கள் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். பயணிகள் நின்றுக் கொண்டு பயணிப்பது தடைச் செய்யப்படும்.

தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பல பிரச்சினைக்கு ஆளாகிவருகின்றனர். பயணச்சீட்டு வழங்குவதை சட்டத்தினூடாக கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.