நவகமுவ பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நவகமுவ பிரதேசத்திலுள்ள விகாரையின் பிக்கு ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.