யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை ஆரம்பம்

Published By: Digital Desk 4

28 May, 2020 | 04:26 PM
image

யாழ்ப்பாணம், தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லவுள்ள அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது. 

வேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். 

இந்த பாத யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4 ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். 

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தை சென்றடையவுள்ளனர். 

இம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்த போதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

முருக பெருமானின் ஆருளாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14