இந்தியா - சீன பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் - ட்ரம்ப்

28 May, 2020 | 03:54 PM
image

இமயமலை எல்லையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உருவாகியுள்ள மோதல் நிலைக்கு மத்தியஸ்தராக செயற்பட அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் முன்வருவதாக புதன்கிழமை தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்கா தயாராக உள்ளது மற்றும் அவர்களின் இப்போது அதிகரித்து வரும் எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யவோ அல்லது நடுவராக செயற்படவோ  முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே 3 ஆயிரத்து 488 கிலோ மீற்றர் தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமது எல்லை பகுதிகளில் வீதி உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரமாக செயற்பட்டுவருகின்றது.

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை முழுவதுமாக சொந்தம் கொண்டாடும் சீனா, லடாக்கின் சில பகுதிகளையும் உரிமை கோரி வருகிறது.

அதனால்தான், லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்தபோது, அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது கிழக்கு லடாக்கின் பங்காங் சோ ஏரி அருகே பிங்கர் பகுதியில் இந்தியா முக்கியமான வீதி ஒன்றையும் கல்வான் பள்ளத்தாக்கில் இணைப்பு வீதி ஒன்றையும் அமைத்து வருகிறது.

இந்த வீதிகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த 5 ஆம் திகதி, கிழக்கு லடாக்கில் பங்காங் சோ ஏரி அருகே இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் படை பலத்தை அதிகரித்துள்ள நிலையில்,  அங்கு இரு படைகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையிலேயே, எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இருநாடுகளிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த போதிலும், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா விலகவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46