பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலுள்ள வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 5 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள்.

குறித்த தீப் பரவலை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

வைத்தியசாலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என தீயணைப்பு சேவை தலைவர்  தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையில், தனிமைப்படுத்தல் பிரிவில் இருந்து  ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் நான்கு ஆண்களும் மற்றும் 45 முதல் 75 வயதுக்கிடைப்பட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய வாரங்களில் பங்களாதேஷில் 38,292 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதுடன், 544 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. 

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்று  அதிகரிப்பதை சமாளிக்க வைத்தியசாலைகள் போராடி வருகின்றன.

160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உண்மையில்  அதிகமாக இருக்கக்கூடும் என்று சில சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்காவின் பனானி பகுதியில் 22 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

அத்தோடு, கடந்த ஆண்டு பெப்ரவரியில், டாக்காவின் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு நரகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்  71 பேர் உயிரிழந்ததோடு,  பலர்காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.