SDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்

27 May, 2020 | 09:50 PM
image

சணச அபிவிருத்தி வங்கி (SDB) PLC இன் புதிய தவிசாளராக சிரேஷ்ட பட்டய கணக்காளரான லக்ஷ்மன் அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. வங்கியின் தவிசாளராக 9 வருட காலமாக பணியாற்றிய சாமதானி கிரிவந்தெனிய தமது பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அந்த பதவிக்கு திரு. அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியின் சிரேஷ்ட பணிப்பாளராக பணியாற்றியிருந்த திரு. அபேசேகர, கணக்காய்வு குழுவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். தவிசாளர் எனும் புதிய பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பல்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற திரு. அபேசேகர, அந்தப் பொறுப்புக்கு பெருமளவு அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டவராக திகழ்கின்றார். நுண்நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனம் என்பதிலிருந்து சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் வங்கி எனும் நிலைக்கு SDB வங்கியை தரமுயர்த்துவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

தமது தொழில் வாழ்வின் ஆரம்ப காலப்பகுதியில் KPMG பயிற்சிகளை பெற்றிருந்த திரு. அபேசேகர, நாட்டின் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். வெவ்வேறு துறைகளில் கணக்கியல், நிதியியல் மற்றும் முகாமைத்துவம் போன்ற பிரிவுகளில் ஆழமான அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

சுமார் மூன்று தசாப்த காலம் நீண்ட இவரின் தொழில் வாழ்க்கையில் இவர் முன்னர் வகித்திருந்த சில பதவிகளில், Emerchemie NB சிலோன் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி, லங்கெம் சிலோன் PLC இன் சிரேஷ்ட கணக்காளர் மற்றும் Hoechst சிலோன் லிமிடெட்டின் கணக்காளர் ஆகிய பதவிகள் அடங்குகின்றன. Peoples இன்சூரன்ஸ் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக இவர் திகழ்வதுடன், JanRich ஃபுட்ஸ் லிமிடெட் மற்றும் NovEx Pharmaceuticals லிமிடெட் ஆகியவற்றின் பணிப்பாளருமாவார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ கல்வியகத்திடமிருந்து (PIM) MBA பட்டத்தை திரு. அபேசேகர பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர் கல்வியகத்தின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்கள் சம்மேளனத்தின் (AAT ஸ்ரீ லங்கா) அங்கத்தவர் என்பதுடன், அதன் ஆட்சிக்குழுவில் சில ஆண்டு காலம் அங்கம் வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களினூடாக மூலதனமிடப்பட்டு கலாநிதி. பி.ஏ.கிரிவந்தெனிய அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 1996 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட SDB வங்கி, விசேடத்துவம் வாய்ந்த வங்கியாக அமைந்துள்ளது. சர்வதேச அபிவிருத்தி போக்குகள் தொடர்பில் நிபுணத்துவத்தைக் கொண்டவரும், இலங்கையின் சமூகங்கள் தொடர்பான பேச்சாளருமான ஸ்தாபகரின் நோக்கம் என்பது, வினைத்திறன் வாய்ந்த கூட்டாண்மை துறையின் வளர்ச்சிக்கு உள்ளார்ந்தமான பங்களிப்பை வழங்கக்கூடிய மாற்று நிதி மாதிரி ஒன்றை நிறுவுவதாக அமைந்திருந்தது. கூட்டாண்மை அபிவிருத்தி தொடர்பான உபகுழுவில் அங்கம் வகித்திருந்த புதிய தவிசாளர், SDB வங்கியை மேலும் வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திச் செல்வதில் நிறுவனத்தின் ஸ்தாபகரின் கொள்கைகளையும், முன்னர் தலைமைத்துவம் வழங்கியிருந்த அதிகாரிகளின் வழிகாட்டல்களையும் பின்பற்றவுள்ளதாகவும், அதனூடாக 'தேசத்தின் முன்னோடி' எனும் நிலைக்கு SDB வங்கியை கொண்டு செல்ல எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57