(இராஜதுரை ஹஷான்)

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்கள் தொடர்பில் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமான் நேற்று  (26) பிரதமரை சந்தித்த  போது மலைய மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மலையக மக்களின் குடியிருப்பு தொடர்பிலான பரிந்துரையினை காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான். பிரதமரிடம் கையளித்தார்.

மலையக மக்களின் குடியிருப்பு, பாடசாலை, மற்றும் உட்கட்டமைப்பு  பிரிவுகளில் காணப்படுகின்றன பிரச்சினைகள் குறித்த பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க பரிந்துரைகள் இன்று இடம்பெற்ற அமைச்சர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.