இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1319 இலிருந்து 1370 ஆக உயர்ந்தது.

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று இனங்காணப்பட்ட 51 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் இருந்த கடற்படை வீரர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 732 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 628 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

75 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.