வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பழைய பஸ் நிலைய பகுதியிலிருந்து வைத்தியசாலை பக்கமாக பயணித்து கொண்டிருந்த கனரக வாகனத்துடன், பின்னால் சென்று  கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளினை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.