மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்  அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை ஆறுமுகன் தொண்டமனை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவை நம்ப முடியவில்லை என இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் அதிர்ச்சி அடைவதாகவும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று  (27) முற்பகல் 11 மணி வரை அன்னாரின் பூதவுடல் கொழும்பு பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அமரரின் பூதவுடல் இராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இதன்போதே இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்  அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.