அவுஸ்திரேலியாவிற்கு கடல்வழியாகப் பயணிப்பது சட்டவிரோதம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டியில் பல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அனைத்து குறுந்திரைப்படங்களிலும் தொனிப்பொருள் சிறந்தமுறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கட்டளைப் படைத் தளபதி, மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி கூறியதாவது “பல்வேறு திறமையான படைப்புகளுடன் மிகப்பெரிய அளவிலான வெற்றியினை நாம் ஏற்பாடுசெய்த முதலாவது போட்டி நிகழ்ச்சியான Zero Chance Stories  குறுந்திரைப்படத் போட்டி பெற்றுத்தந்துள்ளது.

ஆள்கடத்தல்காரர்களால் ஆபத்தான கடல்வழிப் பயணத்தில் அப்பாவி மக்கள் இன்னமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனை குறிப்பிடும் வகையில் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான ஓர் வாய்ப்பினை பொதுமக்களுக்கு வழங்கியிருந்தோம். அதில் துன்பியலான உயிரிழப்பு மற்றும் கைவிடப்பட்ட குடும்பத்திற்கு ஏற்பட்ட பேரழிவு எனபனவற்றை வெற்றிபெற்ற குறுந்திரைப்படம் மிகச் சிறந்தமுறையில் சித்தரித்திரிருந்தது”

நாம் அண்மையில் வெற்றியார்களை சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தோம் அதன் அடிப்படையில் முதல் இடம் வென்ற ஜோயல் ஜைரஸ் இயக்கிய “சேராக்கரைகள்” குறுந்திரைப்படத்திற்கு இலங்கையில் புகழ்பெற்ற கற்கை நிலையத்தில் திரைப்படத் தயாரிப்பிற்கான தேசிய டிப்லோமா கற்கைநெறி பரிசாக வழங்கப்படுவதுடன், இரண்டாம் மூன்றாம் இடங்களைப் முறையே பெற்ற ஹசீன் அதாம் லெப்பே மற்றும் துசாபன் பத்மநாதன் ஆகியோருக்கு மடிக்கணனி மற்றும் ஸ்மார்ட் போனும் பரிசாக வழங்கப்படும்.

சர்வதேச ரீதியில் பாராட்டுப்பெற்ற இயக்குனர் மற்றும் Zero Chance Stories நடுவர் குழுவினைச் சார்ந்த விமுக்தி ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்

“போதுமான உயர் தொழிநுட்ப கருவிகளின் உதவி இல்லாத போதிலும் மிகவும் தத்துரூபமாகவும் நுணுக்கமான முறையில் குறுந்திரைப்படங்களை உருவாக்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. பங்குபற்றிய அனைத்துத் திரைப்பட தயாரிப்பாளர்களும் எதிர்காலம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளை விதைத்திருக்கின்றார்கள்” எனக் குறிப்பிட்டார்.

 “கடல்வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் குடியேறுதல்” எனும் தொனிப்பொருளிலான Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டிக்கு கடந்த ஒக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையிலான நுளைவுக் காலப்பகுதியில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல திரைப்படங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததுடன், வெற்றியாளர்கள் கடந்த ஏப்பிரல் 2020 இல் அறிவிக்கப்பட்டிருந்தார்கள். போட்டியில் பங்குபற்றிய பல போட்டியாளர்களின் படைப்புகள் தற்போது நடைமுறையிலிருக்கும் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் குடியேற முடியாது எனும் செயற்திட்டத்துடன் ஒத்துப்போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆள்கடத்தல்காரர்களால் ஏமாற்றப்பட்டிருத்தல், கடல்வழிப் பயணம் எனத் தெரிந்திருந்தும் உயிராபத்தை எதிர்கொள்ளுதல், பொறுபானவர்களிடம் பிடிபட்பட்டு மீண்டும் இலங்கை திரும்புதல், இலங்கை வந்த பின் குறித்த நபரும் குடும்பமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகிய விடயங்கள் குறுந்திரைப்படங்களில் உள்டக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

நடுவர் குழுவில் மேஜர் ஜெனரல். கிரெயிக் புரினி (எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கட்டளை அதிகாரி), திரு. டேவிட் ஹோலி (இலங்கையின் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்) மற்றும் திரு. விமுக்தி ஜயசுந்தர (விருது வென்ற இயக்குனர்) 

வெற்றியாளர்கள் பற்றி அறிய  www.zerochance.lk விஜயம் செய்யுங்கள்