நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘டிக்கிலோனா’ இந்த படத்தில் சந்தானத்துடன் ‘நட்பே துணை’ பட புகழ் நடிகை அனகா, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பட புகழ் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடல்களை எழுத, யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். கே ஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.

அறிவியல் புனைவு கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில், சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. சந்தானத்தின் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.