கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால் மீண்டும் தனது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெய்னும் ஒன்று. இதனால் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்தார்.
தற்போது ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் ஸ்பெய்னின் மல்லோர்காவிலுள்ள ரபாயேல் நடால் அகடமியில் தனது பயிற்களை ஆரம்பித்தார் நடால்.
அங்கு அவர் பயிற்சிகளில் ஈடுபடும் ‘வீடியோ’க்களை வெளியிட்டு நடால் கூறியுள்ளதாவது:-
“தற்போது நான் ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் ஆரம்பித்தமை மகிழ்ச்சிச்சியளிக்கிறது. எனக்கு எதிராக குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட முடியும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இதுதான் முக்கியமான விடயம்” இவ்வாறு நடால் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM