மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாத்திகுளம் வலையன்கட்டு பகுதியில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

இன்றுகாலை காட்டுப்பகுதிக்கு சென்ற இருவரை கரடி தாக்கியுள்ளது. இந்நிலையில் அவர்கள் கரடியிடமிருந்து தப்பித்து சென்றனர். 

அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர அம்புயூலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மற்றைய நபர் சிறு காயங்களுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.