(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, நாட்டை பாதுகாக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை.

அதிகாரத்தை தவறாக ...

கொரோனா வைரஸை காரணம் காட்டி அரசாங்கத்தை பலவீனப்படுத்தி அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடாகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது  மக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றார்கள்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்தரப்பினர் எவ்வித ஆதரவினையும் வழங்கவில்லை.

நெருக்கடி நிலையிலும் எதிர்தரப்பினர் அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ளவே முயற்சித்தார்கள். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் விடயத்தை தற்போது எதிர்தரப்பினர் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளார்கள்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் பாதுகாப்பு  அம்சங்களை கடைப்பிடிக்கின்றது. அனைவரும் பாதுகாப்பான முறையில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

எதிர்தரப்பினரது அரசியல் பிரச்சாரங்களுக்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டாம். தற்போதைய நெருக்கடி நிலையினை  வெற்றிக் கொள்ள முடியும் என்றார்.