அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு

Published By: J.G.Stephan

27 May, 2020 | 04:01 PM
image

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று ஏழாவது நாளாகவும் இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த விசாரணைகள் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாகவும் உயர்நீதிமன்றில் இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனகே அலுவிஹார, சிசிர டி ஆப்று, பியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றபோது, கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி இரவு முதல் நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் நாட்டு மக்களினதும் மனுதார்களினதும் எந்தவொரு அடிப்படை உரிமையையும் ஜனாதிபதி மீறவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44