வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன்  ஊடக  சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.