யாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்

Published By: J.G.Stephan

27 May, 2020 | 10:05 AM
image

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். 

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன் , குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும். 

இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கிய போது நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே பொலிசார் காயமடைந்துள்ளார். 

அதேவேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வயர்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. 

சம்பவம் தொடர்பில் போலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த வெடிபொருள் மிதிவெடியாக இருக்கலாம் எனவும் , சட்டவிரோத மண் அகழ்வோர் பொலிசாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை  வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30