கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்த வருகின்றனர்.  இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வுகூறியுள்ளது.