கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று காலை ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை 5.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.