மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் மேலும் சில மீனவர்களுடன் குறித்த மீனவர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். பல மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு நோயால் அவதியுற்ற இவர் திடீரென கடலில் தவறி விழுந்துள்ளார் என சக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

3 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய எம்.பதுர்தீன் என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவரது சடலத்தை கடற்படையினரும் பொதுமக்களும் தேடி வருகின்றனர்.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

- ஜவ்பர்கான்