மலையக மக்களின் வரலாற்றில் ஒரு வலுவான ஆளுமை, தொண்டமான் பரம்பரையில் வந்த மலையக மக்களின் தவிர்க்கமுடியாத அடையாளம், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு எம்மை ஆராத்துயரில் ஆழ்த்திவிட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவிற்கு பின் அவர் விட்டு சென்ற வெற்றிடம் எவ்விதத்திலும் தமது மக்களை பாதிக்காமல் மிகவும் சரியாக நிரப்பிய, மலையக வரலாற்றில் கோலோச்சிய ஒரு பலமான தலைவர்.

"தம்பி சார்" என அனைத்து மலையக மக்களாலும் செல்லமாக அழைக்கப்படும், "தென்னிலங்கைவாழ் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அடையாளமாக ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் மலையகத்தை தாங்கிப்பிடித்த ஒற்றைத்தூண்"  தலைவர் தொண்டமானின் மறைவு ஏற்படுத்தும் வலியிலிருந்தும், தாக்கத்திலிருந்தும் மீள இன்னும் பல ஆண்டுகள் செல்லும். 

ஆட்சியில் எந்தவொரு பெரும்பான்மை கட்சி இருந்தாலும் அவருக்கு நிகராக நின்று பேசக்கூடிய, வெளிநாட்டு தலைவர்கள் உற்பட அனைவரும் மதிக்கக்கூடிய ஒரு பலமான தலைவரை மலையகம் இழந்து மிகவும் வேதனையில் மூழ்கியிருக்கிறது. 

CWC Leader Arumugam Thondaman passes away at 55 - The Morning ...

இவர் விட்டுச்செல்லும் வெற்றிடத்தை நிரப்ப அவருக்கு நிகராக வேறு எந்தவொரு தமிழ்த்தலைவரும் தற்போதைக்கு இல்லை என்பதே உண்மை.

தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவால் துயருறும்  அவர்களின் குடும்பம், இ.தொ.கா. இன் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்பட மலையக மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் உங்களின் ஆராத்துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.