அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து அறிந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தலங்கம வைத்தியாலைக்கு விரைந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அரசுக்கும், மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும், பேரிழப்பென தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தலங்கம வைத்தியசாலையில் உயிரிழந்த செய்தி கேட்டு இன்று மாலை அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

ரவி கருணாநாயக்க, மஹிந்தானந்த அழுத்கமகே, மனோ கணேசன் , பந்துல குணவர்தன , மஹிந்த அமரவீர  உள்ளிட்ட பலர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Pic - thamilan