அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேர்ள்டோமீட்டர் வலைத்தளத்தின்படி, ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

அதேசமயம், 1,700,000 க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்கா உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும்,இறப்பிலும் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் 377,711  கொரோனா தொற்றாளர்களை பதிவுசெய்துள்ளது.

ரஷ்யா இதுவரை 3.62 இலட்சம் கொரோனா தொற்றாளர்களை பதிவுசெய்துள்ளது.

ஸ்பெயினில் 2.82 இலட்சத்துக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் உள்ளன, ஐக்கிய இராச்சியம் இப்போது 2.61 இலட்சம் கொரோனா நோயாளிகளை நோயாளிகளைக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 5,639,951 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349,392 ஆக உயர்ந்துள்ளது, அதேசமயம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,406,838 ஆக அதிகரித்துள்ளது.