இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் காலமானார்.

தலங்கம  வைத்தியசாலையில்  சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆறுமுகன் தொண்டமான்  29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர்  கடந்த கால அரசாங்கங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார்.

இன்றைய தினம் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  புதியதாக நியமனம் பெற்ற இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன், தோட்டத் துறையில் நடந்துகொண்டிருக்கும் இந்திய வீட்டமைப்புத் திட்டம்  மற்றும் யாழ்ப்பாண கலாச்சார மையம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.