திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் இன்று (26.05.2020) காலை தேன் எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரான 19 வயது மாணவன் மரக்கிளை உடம்பில் குத்தியதில் உயிரிழந்துள்ளதாக  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சாம்பல்தீவு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும், நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்பவர் எனவும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருப்பவர் எனவும் தெரிவித்தனர்.

தேன் எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரே சுமார் 16 அடி உயரமான மரம் ஒன்றில் பிணமாக கிடந்தவர் எனவும் 15,54 வயதுடைய உயிரிழந்தவருடன் கூட சென்றவர்கள் காட்டில் வழிமாறிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாலை மூன்று மணியளவில் மரணவிசாரணை அதிகாரி திரு.எம் ரூமியினால் மேற்கொள்ளப்பட்டதுடன், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.