லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழில் ஈடுபட்டு கொண்டியிருந்த 12 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் 5 பெண்களும் 7 ஆண்களும் அடங்குகின்றனர்.

இவர்களில் 06 பேர் வைத்திய சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதாகவும், 06 பேர் தொடர்ச்சியாக தங்கி சிகிச்சைப்பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)