பாகிஸ்­தா­னி­லுள்ள தனது பெற்­றோ­ருக்கு விசா மறுக்­கப்­பட்­டதால் அவர்­களைப் பார்த்து அவர்­களால் அர­வ­ணைக்­கப்­பட வேண்டும் என்ற தனது இறுதி ஆசை பூர்த்­தி­ய­டை­யாத நிலையில் 18 வயது யுவ­தி­யொ­ருவர் அமெ­ரிக்க மருத்­து­வ­ம­னையில் மர­ண­ம­டைந்த சம்­பவம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி யுவ­தியின் மரணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்­கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளியிட்­டுள்­ளன.

கிரத் சப்ரா என்ற மேற்­படி யுவதி அவ­ரது தாயார் நயிலா அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்த போது பிறந்­தி­ருந்தார். பின்னர் தாயுடன் தாய்நாடு திரும்­பிய அவர் தனது 4 ஆவது வயதில் உயி­ரா­பத்­தான நுரை­யீரல் நோயால் பாதிக்­கப்­பட்ட நிலையில் அமெ­ரிக்­கா­வுக்கு அழைத்து வரப்­பட்டு டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள மருத்­துவ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் நாடு திரும்­பிய நயி­லா­வுக்கும் அவ­ரது கண­வ­ருக்கும் தமது மகளை மீண்டும் பார்க்க அமெ­ரிக்கா வரு­வ­தற்கு விசா மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனால் கடந்த 10 வருட கால­மாக கிரத் சப்ரா தனது பெற்­றோரையும் சகோ­த­ரர்­க­ளை­யும் பார்க்­கா­ம­லேயே இருந்­துள்ளார்.

18 வய­தை­ய­டைந்­தி­ருந்த அவர் மருத்­து­வ­ம­னையில் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருந்த நிலையில் தனது பெற்­றோரை மீண்டும் பார்ப்­பதே தனது இறுதி ஆசை எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து மேற்­படி யுவ­தியின் இறுதி ஆசையை நிறை­வேற்றக் கோரி ஊட­கங்கள் பலவும் அமெ­ரிக்க அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்­பித்­தன.

இந்­நி­லையில் அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன் கல்­பேர்ஸன் எடுத்துக் கொண்ட நட­வ­டிக்­கையால் கடந்த மாதம் கிரத் சப்­ராவின் பெற்­றோ­ருக்கு அமெ­ரிக்கா வரு­வ­தற்கு விசா வழங்­கப்­பட்­டது.

ஆனால் கடந்த சனிக்­கி­ழமை பிற்­ப­கல் ­கிரத் சப்­ராவின் பெற்றோர் வரு­வ­தற்கு சிறிது முன் அவர் உயி­ரி­ழந்­துள்ளார். அவ­ர­து பெற்றோர் வரும் வரை அவ­ரது உயிரைக் காப்­பாற்ற மருத்­து­வர்கள் மேற்­கொண்ட முயற்சி தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தது.

அவரைப் பார்க்க வந்த அவரது பெற்றோர் அவரது உயிரற்ற சடல த்தையே காண நேர்ந்துள்ளது.