கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் பிடியில் இருந்து மீளுவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நோயாளி வைத்தியரைத் தொடர்புகொள்வதற்கான மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளின் ஊடாக நோயாளி ஒருவர் வைத்தியருடன் நேரடியாக தொடர்புகொண்டு வீடியோ காணொளி மூலம் தமக்குத் தேவையான பிரச்சினைகளை வைத்தியர்களிடம் தெரிவிக்க முடியும்.

இதற்கான விளக்கம் கடந்த 24 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டது.

இந்த கணனி மென்பொருளை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீப் கலன்சூரிய தலைமையில் அங்கு கல்விபயிலும் மாணவர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கியுள்னர்.

இந்த கணனி மென்பொருளானது கியூரக் (Curec) எனப்படுகின்ற ஒரு மென்பொருளாகும். இது வெற்றியளிக்கும் ஒரு செயற்பாடாகவுள்ளது.

இந்த மென்பொருள் அறிமுகத்தில் பல்வேறுபட்ட விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தாலும் மருத்துவத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களாக வைத்திர்களான சமன் யாப்பா பண்டார பிரதிப் பணிப்பாளர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, வைத்தியர் இராஜ் ஜயசிங்க வைத்திய நிபுணர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.