நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று செவ்வாய்கிழமை மாலை 7.00 மணி வரை 1,278 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மாலை வரை புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 96 பேர் இனங்காணப்பட்டனர்.

இன்று இனங்காணப்பட்ட 96 நோயாளர்களில் 86 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் எனவும், 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதோடு, 712 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அத்தோடு தற்போது 556 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு இன்றைய தினம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 1347 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.