(இரா. செல்வராஜா)

நாட்டின் பல பாகங்களில் நாளை இடியுடன்கூடிய கனத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 4 நாட்களுக்கு கடும் மழை ...

நாளை கடற்பிராந்தியத்தில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள்  மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் அதிகாரி மொஹமட் சாலிஹீன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை புதன்கிழமை இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாகவும்,  நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்யலாம் எனவும் வானிலை அதிகாரி மேலும் தெரிவித்தார்.