மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிடில் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் பாலித தேவபெரும தெரிவித்துள்ளார்.

மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மத்துகம வலயகல்வி அலுவலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. 

இதனால் வலயகல்வி முன்னால் உள்ள வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.