வளிமண்டலளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கிறது.

நாட்டின் பல மாவட்டங்களில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கனத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வகூறியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்கள வெள்ள அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

மகாவலி, களனி, நில்வளா, ஜின் , களு ஆகிய நதிகள் பெருக்கெடுக்கும் பட்சத்தில் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாதாகிவிடும். ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்தளவிலேயே காணப்படுகிறது. 

இதனால், மழை பெய்யும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தவிர்க்க முடியதாகிவிடும் எனவும் பணிப்பாளர் சுகீஸ்வர தெரிவித்தார்.