(இரா.செல்வராஜா)

வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் இறுதி ஆண்டு மாணவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு அழைப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை கூடி ஆலோசித்த பல்கலைக்கழக ஆணைக்குழு இது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய இறுதி ஆண்டில் கல்வி பயிலும் வைத்திய பீட மாணவர்களை பரீட்சையில் தோற்றுவதற்காக தயார்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அழைக்கப்படும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், அவர்களை தனித்தனியான அறைகளில் தங்கவைப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்