உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச இசை ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த அரச இசை விருது வழங்கும் விழா  நேற்று கொழும்பு- 07, தாமரை தடாகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தகர் கலந்து கொண்டுடிருந்தனர். 

இதன்போது 2015 ஆம் இலங்கையில் வெளிவந்த பாடல்கள், பாடல்வரிகள், இசையமைப்பு, சிறந்த பாடகர் சிறந்த திரை ஒளி ஆக்கம், சிறந்த கிராமிய பாடல் எனும் 27 துறைகளில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படைப்புக்களுக்கான  விருதுகள் தனித் தனியாக வழங்கப்பட்டுள்ளன.

அதுதவிர இலங்கை இசைத்துறையை மிளரச் செய்த 12 மூத்த இசைக் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் இதன் போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

வருடந்தாம் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரச இசை விருதுகள் இந்த ஆண்டும் வழங்கப்பட்டுள்ளன. 

இதன் போது,  பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்களையும்  தன்னகத்தே கொண்ட   ஜெ . எம் . ஷமீல் தனது பிரத்தியேக படைப்புக்களுக்கான ஒரே மேடையில் 4 விருதுகளை சுவிகரித்துக் கொண்டார்.

சிறந்த பாடல் வரிகள் ( சிறுவர் ), சிறந்த இசையமைப்பு ( சிறுவர் ), சிறந்த சிறுவர் இறுவெட்டு, திறந்த பிரிவிற்கான சிறந்த இறுவெட்டு ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அத்தோடு சிறந்த பாடகி ( சிறுமி ) மற்றும் சிறந்த காணொளிப்பாடல் ஆகிய விருதுகளும் ஷமீலின் இசையில் உருவான பாடல்களுக்கே கிடைக்கப்பெற்றன .