உலகின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பானின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா வலம் வருகிறார்.

Naomi Osaka Tops Serena Williams to Become the Highest-Paid Female ...

போர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டு தோறும் உலகின் அதிக வருமானம் ஈட்டும் 10 விளையாட்டு வீராங்கனைகளை பட்டியலிடும்.   2019ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டிருந்தது. 

ஒட்டுமொத்த விளையாட்டு பிரபலங்கள் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனைகளான  நயோமி ஒசாகா 29ஆவது இடத்திலும் செரீனா வில்லியம்ஸ் 33 ஆவது இடத்தையும் வகிப்பதாக போர்ப்ஸ் அறிவித்துள்ளது.  

இதேவேளை, அதிகம் வருமானம் ஈட்டும் வீராங்களைகள் பட்டியலில் நவோமி ஒசாகா முதலிடத்தைப் பெற்றார். 22 வயதான நயோமி ஒசாகா 37.4 மில்லியன்  அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 15 விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் உள்ளார்.

இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டொலர் வருமானத்தை  ஈட்டியுள்ளார். இதன்முலம் செரீனாவை விடவும், ஒசாகா 1.4 மில்லியன் டொலர் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளார்.

அத்துடன், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓராண்டில் 37.4 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் அதிக வருமானத்தை ஈட்டிய வீராங்கனை என்ற புதிய சாதனையை பதிவு செய்துள்ளார் நயோமி ஒசாகா.

1990ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான முழுப் பட்டியலில் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி,  2019ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி என இரண்டு முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் நயோமி ஒசாகா.

இதன் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நயோமி, தற்போது பெண்களுக்கான தரவரிசையில் 10 ஆவது இடத்தை வகிக்கிறார்.