வெல்லம்பிட்டிய, வென்னவத்த பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பருப்பு பதப்படுத்தும் ஆலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.