நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படமான ‘ரேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புனித ரமழான் வாழ்த்துக்களுடன் வெளியாகியிருக்கிறது.

‘வால்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ரேஞ்சர்’. இந்த படத்தை பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்குகிறார் . 

கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, அரோல் கரோலி இசையமைக்கிறார். வசனங்களை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுத, எடிட்டர் சிவாநந்தீஸ்வரன் படத்தை தொகுக்கிறார்.

வனப்பகுதியிலிருந்து ஊர் எல்லைக்குள் வரும் சிறுத்தை ஒன்றை, மீண்டும் வனத்திற்குள் திரும்ப வைக்கும் வன அதிகாரியாக சிபி சத்யராஜ் நடிக்கிறார். க்ரைம் எக்சன் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்தின் புதிய போஸ்டரை, படக்குழுவினர் புனித ரமழான் தன வாழ்த்துக்களுடன் வெளியிட்டிருக்கிறது.

நடிகர் சிபி சத்யராஜ் தற்போது ‘மாயோன்’, ‘ரங்கா ‘,‘வட்டம்’,‘ கபடதாரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.