மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசியல் செயற்பாட்டு இயக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் ஆரம்பிக்கப்படுமென கூட்டு எதிர் அணி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  இதனை தெரிவித்தார்.

கண்டியிலிருந்து கொழும்பை நோக்கியதாக அமையவுள்ள இந்த பேரணி வரலாறு காணாத வகையில் நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.