விஜய் அன்டனி நடித்து வரும் ‘காக்கி’ படத்தின் அப்டேட் விடயங்களை படக்குழு தெரிவித்துள்ளது.

‘வாய்மை’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செந்தில்குமார் இயக்கிவரும் திரைப்படம் ‘காக்கி’. இந்த படத்தில் விஜய் அன்டனி, ஸ்ரீகாந்த், சத்யராஜ், யோகிபாபு, இந்துஜா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஆகத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்திற்கான பின்னணி குரல் பதிவு பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் பங்குபற்றி பின்னணி பேசிவருகிறார்.

‘திமிருபிடிச்சவன்’ என்ற படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அன்டனி பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. 

இதைத் தவிர்த்து நடிகர் விஜய் அன்டனி தற்போது ‘தமிழரசன்’,‘ அக்னி சிறகுகள்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.