நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இடைநடுவே நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் அச்சமின்றி அசராது அந்த நேர்காணலை வழங்கியதை காணக்கூடியதாக உள்ளது.

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இருந்து தொலைக்காட்சியொன்றுக்கான நேர்காணலில் பிரதமர்  ஜெசிந்தா ஆர்டெர்ன் இன்று பங்கேற்றிருந்தார்.

அந்த நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அவருக்கு பின்னால் இருந்த திரை மற்றும் பொருட்கள் நில அதிர்வினால் அதிர்ந்தன. எனினும் பிரதமர் ஜெசிந்தா பதற்றமடையாமல் தனது நேர்காணலை தொடர்ந்தார்.

அவருக்குப் பின்னால் இருக்கும் பொருட்கள் நில அதிர்வில்  அசைவதை அவதானித்த பிரதமர் ஜெசிந்தா, எவ்வித பதற்றமுமின்றி அச்சம் இன்றி, முகத்தில் புன்னகையுடன் பேசிய அவர், ‘இங்கு நாம் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்து இருக்கிறோம்’ என்றார். 

சற்று நேரத்தில் குறித்த நில அதிர்வு நின்ற நிலையில் அவர் அந்த நேர்காணலை தொடர்ந்தார்.

 குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியிருந்ததுடன் எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது பொருட் சேதங்களே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.